ஆப்பிளின் புதிய ஐ-பேடு ஓர் அறிமுகம்





மார்ச் மாதம் 7 அன்று, சான் பிரான்சிஸ்கோ நகரில், யெர்பா புயான மையத்தில் (Yerba Buena Center) தன் புதிய ஐ-பேட் டேப்ளட் பிசியினை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் மார்ச் 16 அன்றுபொதுமக்களுக்கு விற்பனைக்கு வந்தது. இதற்குப் புதிய பெயர் எதனையும் தராமல் "புதிய - ஐபேட்' என ஆப்பிள் பெயர் சூட்டியுள்ளது. ஐ-பேட்2 வெளியாகி, ஏறத்தாழ ஓராண்டு கழித்து இந்த புதிய ஐ-பேட் வெளியாகி உள்ளது.


இதன் வீடியோ பார்க்க விரும்பினால் இங்கே :http://www.apple.com/ipad/#video

இந்த ஐபேடின் அதி முக்கிய சிறப்பம்சம் என இதன் திரையினைக் கூறலாம். இதன் திரை குறுக்காக 9.7 அங்குலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரையின் தோற்றக் காட்சியை 'ரெட்டினா டிஸ்பிளே' (Retina Display) என ஆப்பிள் அழைக்கிறது. 
9.7 INCH
 இதன் ரெசல்யூசன் 2048x1536 பிக்ஸெல்கள். இதனால் 31 லட்சம் பிக்ஸெல்கள் கிடைக்கும். திரைத் தோற்றத்தினை, எவ்வளவு நெருக்கமாக விரித்துப் பார்த்தாலும், இதன் பிக்ஸெல்களைக் காண இயலாது. இதன் மூலம் நம்பமுடியாத அளவிற்குத் தெளிவான காட்சி கிடைக்கிறது. திரைப்படமாக இருந்தாலும், கேம்ஸ் விளையாடினாலும், படத்தைப் பார்ப்பதாக இருந்தாலும், கிடைக்கும் தெளிவும் துல்லியமும் நம் கண்களை அகல விரித்து ஆச்சரியப்பட வைக்கின்றன. ரெட்டினா டிஸ்பிளே கொண்ட முதல் டேப்ளட் பிசி இதுதான். அசூஸ் நிறுவனமும் இதனைப் பயன்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் அதன் டேப்ளட் பிசி இன்னும் வெளிவரவில்லை. இந்த புதிய ஐ-பேடின் தடிமன் 9.4 மிமீ. எடை 635 கிராம். இதன் பரிமாணம் 241.2x185.7x9.4 மிமீ.
RETINA EYE

ஐபேட்2 சாதனத்தின் கேமரா அதிகம் சிறப்பில்லாமல் இருந்ததனால், இம்முறை புதிய ஐபேடில், இரண்டு கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. பின்புறமாக 5 எம்பி சென்சார் திறன் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் ஐ.ஆர். பில்டர் இணைக்கப்பட்டுள்ளது.
CAMERA
 இதன் ஐந்து எலிமெண்ட் லென்ஸ் மற்றும் லென்ஸ் விரிவெளி மூலம் 1084 பி வீடியோ பதிவு செய்திட முடிகிறது. கூடுதலாக ஆடியோ போகஸ், டேப் போகஸ் மற்றும் வீடியோ தரப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். முன்புறமாக விஜிஏ தன்மையுடன் கூடிய கேமரா ஒன்றும் உள்ளது. வீடியோ சேட்டிங் போன்ற செயல்களுக்கு இது உதவுகிறது.
AIRPLAY WITH APPLETV7


நெட்வொர்க் இணைப்பிற்கு புளுடூத் 4 வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இச்சாதனத்தின் அடுத்த சிறப்பு இதன் பேட்டரி. இதுவரை அதிக பட்சமாக 6944 mAh திறன் கொண்ட பேட்டரியை ஆப்பிள் தந்தது. தற்போது தரப்படும் பேட்டரியின் திறன் 11,666 mAh ஆக உள்ளது. ஏறத்தாழ இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. வை-பி இணைப்பு, வீடியோ காணல் செயல்பாட்டிலும் 10 மணி நேரம் தொடர்ந்து சக்தி தரக்கூடிய மின் பேட்டரியாக இது உள்ளது. மொபைல் நெட்வொர்க்கில் இணைத்துப் பயன்படுத்தினாலும், 9 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த பேட்டரி செல்களை இணைப்பதன் மூலம் டேப்ளட் பிசியின் எடை பரவல் தடுமாற்றம் அடையாமல் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் சிரி (Siri) தொழில் நுட்பம் இணைக்கப்படவில்லை. ஆனால், மின்னஞ்சல், குறுஞ்செய்தி, குறிப்புகள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றை குரல் மூலம் அமைத்து டெக்ஸ்ட் அமைத்திடும் Voice Dictation வசதி தரப்பட்டுள்ளது. 
VOICE DICTATION

இந்த புதிய ஐ-பேடின் செயல் திறன் வசதியும் வியக்கத்தக்க வகையில் உள்ளது. இதில் குவாட் கோர் கிராபிக்ஸ் ப்ராசசர் மற்றும் A5X சிப் தரப்பட்டுள்ளது. இதன் கிராபிக்ஸ் ப்ராசசர் சூப்பர் ஸ்டார் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது NVIDIA Tegra 3 கிராபிக்ஸ் ப்ராசசரைக் காட்டிலும் நான்கு பங்கு கூடுதலான திறனுடன் காட்சியைத் தரக்கூடியது. 
PROCESSOR
இந்த இரண்டு திறன் வசதிகளும் இணைந்தே ரெட்டினா டிஸ்பிளேயைச் சிறப்பாக அளிக்கின்றன. அத்துடன் ஐ-பேட் செயல்பாடுகளை மிக எளிதாக இயங்க வைக்கின்றன. சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், வீடியோக்கள், கேம்ஸ் என எதுவாக இருந்தாலும் அவை எந்த சிக்கலும் இன்றி மேற்கொள்ளப்படுகின்றன. 
 
ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில், டேவிட் டாராசென்கோ என்பவர். இந்நகரில் ஜார்ஜ் தெருவில் உள்ள புகழ் பெற்ற டெல்ஸ்ட்ரா ஸ்டோரில் இதனை வாங்கினார்.
ஐஒர்க், ஐமூவி மற்றும் காரேஜ் பேண்ட் என்ற அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளன. புதியதாக, ஐ-பேட் சாதனத்தில் பயன்படுத்த, ஆப்பிள் நிறுவனம் ஐ-போட்டோ என்ற அப்ளிகேஷனைத் தந்துள்ளது. சாதாரண லேப்டாப் கம்ப்யூட்டரைக்காட்டிலும் பல திறன் கொண்ட வசதிகளை இதில் அளிக்கமுடியும் எனக் காட்டுவதற்காகவே இந்த அப்ளிகேஷன்களை ஆப்பிள் மேம்படுத்தித் தந்துள்ளது. 

சாதாரண பயன்பாடுகளை மட்டும் மேற்கொண்டு ஐ-பேட் பயன்படுத்தி வரும் பழைய வாடிக்கையாளர்களுக்கு, இந்த புதிய ஐ-பேட் மாற்றங்கள் அவ்வளவாகப் புலனாகாது. திரை ஒன்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் ஆச்சரியமான வேறுபாடாகத் தெரியும்.
இந்த புதிய ஐ-பேட் மூன்று வடிவமைப்புகளில் கிடைக்க இருக்கிறது. வை-பி மற்றும் கொண்டதாக, வை-பி மற்றும் 4ஜி இணைப்பு கொண்டதாக என இரண்டு வகைகளில் கிடைக்கும். இதன் கொள்ளளவில் மாற்றம் எதுவுமில்லை. ஐ-பேட்2 போலவே, இந்த இரண்டு வகைகளிலும், 16, 32 மற்றும் 64 ஜிபி கொள்ளளவுகள் கொண்டு மூன்று மாடல்கள் தரப்படும். அமெரிக்கா மற்றும் 25 ஐரோப்பிய நாடுகளில் இவை, மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களின் இணைப் புடன் இணைந்தே விற்பனை செய்யப் படுகின்றன.
இந்தியா உட்பட ஆசிய நாடுகளிலும் இவை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கும் மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்தின் சேவை திட்டங்களுடனே இவை விற்பனை செய்யப்படலாம்.
APP STORE

இந்த புதிய ஐ-பேட் மூலம், 2012 ஆம் ஆண்டு டேப்ளட் பிசி விற்பனைச் சந்தையில் 70% பங்கினை ஆப்பிள் பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பிள் ஸ்டோர் மூலம் வழங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் அடிப்படையில் விற்பனையை எதிர்பார்க்கிறது. ஐ-பேட் சாதனங்களுக்கு மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம்கள் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கின்றன. புதிய ஐ-பேட் விற்பனைக்கு வந்ததனால், ஐ-பேட் 2 டேப்ளட் பிசியின் விலை, அனைத்து நாடுகளிலும், 100 டாலர் அளவிற்குக் குறைக்கப்பட்டுள்ளது. 

டேப்ளட் பிசி விற்பனையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட மாடல்கள் உள்ளன. இருப்பினும், முதல் இடத்தினை ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் டேப்ளட் பிசிக்களே இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஐபேட் அறிமுகமானவுடன், ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை 43 சென்ட் உயர்ந்து, 530.69 டாலராக ஆனது.

No comments: