எந்த பாஸ்வோர்ட் -டும் வேண்டாம்,போல்டர் -களை மறைக்கவும் வேண்டாம்,மொத்தமாக ஹர்ட் டிரைவ் மறைய வைக்க நீங்கள் யோசித்து இருந்தால் அதற்கு இதோ வழி..
- டிஸ்க் பார்ட் டூல் பயன்படுத்தி மறைக்க
- ரெஜிஸ்டிரி பயன்படுத்தி மறைக்க
- HDDRIVE பயன்படுத்தி மறைக்க
- TWEAKUI பயன்படுத்தி மறைக்க
- DISK MANAGEMENT பயன்படுத்தி மறைக்க
இது CMD DOS PROMPT ஹர்ட் டிஸ்கை மறைய வைக்கும் விண்டோஸ் தரும் எளிய வழி முறை.என்றாலும் இது தொடர்புடைய எந்த தகவலையும் நாம் மறைந்திருக்கும் போது வெளிக்கொணர இயலாது.
முதலில் டிஸ்க் பார்ட் என்று cmd யில் டைப் செய்யவும்.
பின்னர் LIST VOLUME என்று டைப் செய்திடும் போது உங்களுடைய ஹர்ட் டிரைவ் பகுதிகள் உங்கள்ளுக்கு காண்பிக்கப்படும்.
நீங்கள் மறைக்க விரும் டிரைவ் -ஐ தேர்ந்தெடுக்க SELECT VOLUME -உடன் அதன் எண் கீழ்கண்டவாறு..
அதன் பின்னர் REMOVE LETTER உடன் உங்களுடைய டிரைவ் லெட்டர்-ஐ பயன்படுத்தினால் உங்களுடைய டிரைவ் மறைய ஆயத்தமாகி விட்டது என்று அர்த்தம்.(எ கா REMOVE LETTER D).ஒரு முறை நீங்கள் கணினியை ரீ-ஸ்டார்ட் செய்தல் உங்கள் டிரைவ் உங்களுக்கு தெரியாது.மீண்டும் டிரைவ் கொணர REMOVE LETTER D பதிலாக ASSIGN LETTER D என்று மாற்றினால் உங்களுக்கு மீண்டும் உங்கள் டிரைவ் காண கிடைக்கும்.
2.ரெஜிஸ்டிரி பயன்படுத்தி மறைக்க
இதை கையாளும் போது கவனம் வேண்டும்.REGISTRY ஓபன் செய்ய பின்வரும் வழி முறைகளை கையாளுங்கள்.
RUN COMMAND->ரேகேடிட் என்று டைப் செய்து ரெஜிஸ்டிரி ஓபன் செய்யுங்கள்.
ஒவ்வொன்றாக பின்வரும் வரிசைகளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
HKEY_CURRENT_USER’->Software’->Microsoft’->Windows’->CurrentVersion’->Policies’->Explorer
ஒவ்வொன்றாக பின்வரும் வரிசைகளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
HKEY_CURRENT_USER’->Software’->Microsoft’->Windows’->CurrentVersion’->Policies’->Explorer
பின்னர் இடதுபுறம் ரைட் கிளிக் செய்து DWORD value ஒன்றை புதிதாக ஓபன் செய்து அதை NO DRIVES தலைப்பில் பதிவு செய்யுங்கள்.பின்னர் அதை டபுள் கிளிக் செய்து அதன் DECIMAL VALUE பதிவு செய்யுங்கள்.நம்முடைய டிரைவ் -களின் DECIMAL VALUE உங்களுக்காக கீழே.
Values for each drive per its letter:
A = 1
B = 2
C = 4
D = 8
E = 16
F = 32
G = 64
H = 128
I = 256
J = 512
K = 1024
L = 2048
M = 4096
N = 8192
O = 16384
P = 32768
Q = 65536
R = 131072
S = 262144
T = 524288
U = 1048576
V = 2097152
W = 4194304
X = 8388608
Y =16777216
Z = 33554432
All drives = 67108863
ரீ-ஸ்டார்ட் செய்தவுடன் மேல பதிவு செய்த டிரைவ் மறைக்கப்பட்டு விடும்.
3.HDDRIVE பயன்படுத்தி மறைக்க
மிக எளிமையான ஒரு டூல் பயன்படுத்தவும் மிக எளிதானது மற்றும் இலவச மென்பொருளும் கூட. இதை டிரைவ்-ல் இன்ஸ்டால் செய்யும் தேவையும் இல்லை.
தரவிறக்க சுட்டி:http://www.ziddu.com/download/2741816/hdhide.zip.html
இதில் நீங்கள் விரும் டிரைவ்-ஐ தேர்ந்தெடுத்து பின்னர் அப்ளை செய்தால் முடிந்தது வேலை.இதில் ரீ-ஸ்டார்ட் தேவை இல்லை.
4.TWEAKUI பயன்படுத்தி மறைக்க
இதுவும் இலவச மென்பொருளே என்றாலும் இதில் டிரைவ்-ஐ மறைப்பதை விட பல கூடுதல் அம்சங்களும் தரப்பட்டுள்ளன.TASK MANAGER,WINDOW EXPLORER, போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும்.
தரவிறக்க சுட்டி:http://www.ziddu.com/download/2741877/TweakUiPowertoySetup.exe.html
இன்ஸ்டால் செய்த பின்னர் ப்ரோக்ராம்ஸ் -ல் தேடி பயன்படுத்துங்கள்.
5.DISK MANAGEMENT பயன்படுத்தி மறைக்க
MY COMPUTER->RIGHT CLICK->MANAGE->DISK MANAGEMENT
இதனை தொடர்ந்து விரும் டிரைவ்-ஐ தேர்ந்தெடுத்து அதன் மேல் ரைட் கிளிக் செய்து கொள்ளுங்கள்.அதில் வரும் CHANGE DRIVE LETTER AND பத -ஐ பயன்படுத்தி காண்பிக்கும் டிரைவ்-இன் LETTER-ஐ REMOVE செய்தால் டிரைவ் மறைவது உறுதியாகி விடும்.இதை ASSIGN செய்யும் போது மீண்டும் பெறலாம்.
No comments:
Post a Comment