SOCIAL NETWORKING என அழைக்கப்படும் FACEBOOK , TWITTER , MYSPACE , ORKUT போன்ற தளங்களில் எவ்வாறு நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் MICROSOFT SECURITY தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் 11 அம்சங்கள் உங்களுக்காக.ஏனெனில் நாம் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளும் விசயங்களை காட்டிலும் இது போன்ற தளங்களில் தான் அதிகம் பகிர்வோம் இல்லையா..அதனால் நீங்களும் இதை பாருங்களேன்..

உங்களுக்கு பகிரப்படும் LINK (மற்ற இணையங்களுக்கான தொடர்பு ) -களை கிளிக் செய்யும் பொது அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யுங்கள்.

பெரும்பாலும் HACK செய்யப்படும் உங்கள் SOCIAL கணக்குகள் FORGOT YOUR PASSWORD தொடர்பின் வழியேதான் பெரும்பாலும் தொடங்குகின்றார்கள்.ஏனெனில் நீங்கள் பெரும்பாலும் கொடுக்கும் SECURITY கேள்விகளுக்கான பதிலை நாம் பிறந்த நாள்,சொந்த ஊர்,மிடில் நேம்,மொபைல் நம்பர் என தருகின்றோம்,அதையே நம்முடையே PROFILE -லில் காட்டும் படியும் வைத்துள்ளோம்.இது எனது தந்தை குதிருக்குள்ளே இல்லை என்பது தானே..எனவே நீங்கள் SECURITY QUESTION -களை சொந்தமாக தயார் செய்யுங்கள்.(நான் முதல் மொட்டை அடித்த இடம் )மேலும் PROFILE -லில் உங்கள் ஜாதகம்,PIN CODE என எல்லாவற்றையும் பதிவு செய்வதை தவிருங்கள்.
உங்கள் கணக்கை மட்டும் அல்ல உங்களின் நண்பருக்கும் இதுபோல HACK ஏற்படலாம்.எனவே உங்களின் நண்பரின் பெயரில் எதாவது REQUEST ,COMMENT ,HELP என எந்த தகவல் சந்தேகப்படும் படி வந்தால் மாற்று வழியில்(MOBILE) அதை உறுதி செய்து பின் உதவுங்கள்.

உங்களுக்கு ஒரு தளத்தில் இருந்து மற்றொரு தளத்திருக்கு செல்ல தரும் LINK களை பயன்படுத்தாமல் நேரடியாகவே தளத்தின் முகவரியை OPEN செய்யுங்கள்.ஏனெனில் இது உங்களை HACKER கள் வேறு தளத்திருக்கு இழுத்துச் செல்வதையும் USERNAME PASSWORD -ஐ திருட முயற்சிபதையும் தவிர்க்கலாம்.

FRIEND REQUEST அனுப்பும் அனைவரையும் உங்கள் PROFILE -லில் சேர்க்காமல் அவரை சேர்ப்பது குறித்து யோசித்து முடிவெடுங்கள்.ஏனெனில் ACCOUNT ஆரம்பிப்பது இலவசம் தானே அனைவருக்கும்..

பல SOCIAL NETWORK தளங்களில் பல மென்பொருட்கள் (நம்பத்தன்மை அற்றவை என பகிரங்கமாக தளமே அறிவிக்கும்) INSTALL ஆக அடம்பிடித்தால் அனுமதி அளிக்காதீர்கள்.
இவை உங்களின் மொத்த DATA வையும் ஸ்வாக செய்ய வாய்ப்பும் உண்டு .


உங்கள் குழந்தை களுக்கு இதன் மூலம் வரும் பிரச்சினைகளை அறிவுறுத்தி வையுங்கள்.இவர்கள் இனிமேல் இந்த பூதத்தை தீனி போட்டு வளர்க்கும் சீமான்கள்...புரிய வையுங்கள்...
Micro Soft -ன் லிங்க்:http://www.microsoft.com/security/online-privacy/social-networking.aspx
நன்றி...
நன்றி...
No comments:
Post a Comment